search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை கீழ்ப்பாக்கம்"

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.15 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    சென்னை:

    அண்ணாநகர் கிழக்கு 5-வது தெருவில் ஜவுளி கடை நடத்தி வருபவர் தேவதாஸ். இவர் நேற்று இரவு அண்ணாநகரில் உள்ள கிளப்புக்கு சென்று விட்டு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். உடன் சகோதரர் ராம், நண்பர் வினோத் ஆகியோரும் இருந்தனர். தேவதாஸ் ஆட்டோவின் ஓரத்தில் அமர்ந்து இருந்தார்.

    கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தேவதாஸ் வைத்திருந்த பையை திடீரென பறித்துச் சென்று விட்டனர்.

    அதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் இருந்தது. அதிர்ச்சி அடைந்த தேவதாஸ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தேவதாஸ் நகையுடன் வருவதை அறிந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ்காரரை ஹெல்மெட்டால் தாக்கிய சட்டக்கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் முத்துக்குமாருக்கும், இன்னொரு மோட்டார் சைக்கிளில் சென்ற சட்டக்கல்லூரி மாணவர் சரவணனுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரர் முத்துக்குமாரை, சரவணன் சரமாரியாக தாக்கினார். ஹெல்மெட்டால் தலையில் ஓங்கி அடித்தார். இதில் முத்துக்குமாரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் முறிந்தன.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கீழ்ப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த போலீஸ்காரர் முத்துக்குமாரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவர் சரவணன் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    ×